Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் மன்னிப்பு கேட்கணும்..! ஸ்டாலின் ராஜினாமா செய்யுங்க… திருமாவுக்கு பயம் இருக்கு ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சீமான் இப்படி தொடர்ந்து தடை செய்யப்பட்ட PFI இயக்கத்தை ஆதரித்து பேசுகிறார், ஏற்கனவே யாசின் மாலிக்கை கூப்பிட்டு வந்து இங்கே நிகழ்ச்சி நடத்தி  இருக்கின்றார். அதனால் தான் நாம் தமிழரையும், சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறோம். ஏற்கனவே ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் காந்தியை கொன்றது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.  நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தோம், நீதிமன்றம் அவரை அழைத்து…  நீதிமன்றத்திலே ராகுல் மன்னிப்பு கேட்டார்.

அந்த சூழல் சீமானுக்கும், நம்முடைய திருமாவளவனுக்கும் ஏற்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழகத்தில் அசாதாரண சூழல் என்று சொன்னால்,  இதை சமாளிக்க முடியவில்லையா ? சமாளிக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்.

மதமே இல்லை,  கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய திருமாவளவன் இந்து கடவுள் மட்டும் தான் இல்லை என்று சொல்வார்கள், திராவிட கழகமோ,  நாம் தமிழரும் சேர்ந்து நடத்தினால் அது பெயர் மத நல்லிணக்க பேரணியா ? நாங்கள்தான்,  மத நல்லிணக்கம். அதனால் தான் ஆர்எஸ்எஸ் தலைவர்  நேரடியாக முஸ்லிம் தலைவர் இமாமை  சென்று சந்தித்திருக்கிறார், இமாம், ஆர்எஸ்எஸ் தலைவரை  இந்த தேசத்தின் தந்தை என்கிறார்கள்.

முஸ்லிம்கள் ஜீனும்,  எங்கள் ஜீனும் ஒன்று என்கிறார்கள். நாங்கள் நல்லிணக்கமாக தான் இருக்கிறோம். ஆர்எஸ்எஸ் வளர்ந்து வருகின்ற பகுதிகளில் லஞ்ச, ஊழல் ஒளிக்கப்படுகின்றது.  ஒழுக்கம், கட்டுப்பபாடு  தேச பக்தி வளர்கிறது. இதை பார்த்து தான் இந்த சீமானுக்கும், தொல் திருமாவளவனுக்கும் பயமே ஒழிய, மத்தபடி ஆர்எஸ்எஸினுடைய அந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் கலவரம் வராது என்று அவர்களுக்கும் தெரியும் என தெரிவித்தார்.

Categories

Tech |