செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், டிஜிபி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினுடைய அமைப்பு பொதுச்செயலாளர் பாரதமாதா செந்தில் அவர்கள் தலைமையில், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட இந்திய அரசாங்கத்தால் தேசவிரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட PFI இயக்கத்தை ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து இவர்கள் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுக்க PFI கொடி கம்பங்கள் இருக்கிறது இவற்றை அகற்றிட வேண்டும். இந்த தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுகின்ற நாம் தமிழர், விடுதலை சிறுத்தை. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே யாசின் மாலிக் என்று சொல்லக்கூடிய காஷ்மீர் பயங்கரவாதியை தமிழகத்திற்கு அழைத்து வந்து, ஒரு பிரிவினைவாத மாநாட்டை இங்கே நடத்திருக்கிறார். தொல் திருமாவளவன் அவர்கள் குண்டு வெடிப்பு கைதி அப்துல் நாசர் மதானி அவர்களே நேரில் சந்தித்து பேசியது மட்டுமல்ல, PFI-னுடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டு அங்கே வெறுப்பு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்.
எனவே இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். அதற்கு ஆதரவாக பேசுகின்ற எந்த இயக்கமாக இருந்தாலும், தலைவர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கை மனுவையும், புகார் மனுவையும் டிஜிபி அலுவலகத்தில் சமர்ப்பிக்கின்றோம். முழுக்க முழுக்க விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு நாங்களும் போட்டிபேரணி நடத்துவோம் என்று அறிவித்து, ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினை உருவாக்க அவர்தான் முயற்சிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, அவர்கள் ஆர் எஸ் எஸ்க்கு தடை என்பது தமிழக அரசாங்கத்தினுடைய இயலாமையை காட்டுகிறது. கூட்டணி கட்சி நிர்பந்தத்திற்கு இந்த அரசாங்கம் பணிந்து போகிறது என தெரிவித்தார்.