சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் மண்டலத்தில் உள்ள Adligenswil என்ற பகுதியில் வசிக்கும் Alishia Buche என்ற இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். இதனால் அவரின் இரட்டை சகோதரியான செலினா, காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.
செலினா கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 21ஆம் தேதியன்று இரவில் கடைசியாக Alishia வை பார்த்தேன். அதன் பிறகு, 22 மற்றும் 23-ம் தேதிகளில் தொலைபேசியில் பேசினோம் என்று கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அவர் என்னிடம் பேசிய போது உடல்நலம் சரியில்லை என்று கூறினார்.
அப்போது தொலைபேசியில் அடிக்கடி இடையூறு ஏற்பட்டது. அதன் பின்பு தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பலமுறை அவருக்கு தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் அன்று, மூன்று பேர் தன் சகோதரியுடன் சென்றதாகவும், அவர் காணாமல் போனதற்கு அவர்கள் தான் காரணம் என்றும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். தற்போது வரை இச்சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் கிடைக்காததால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.