உலக கடற்கரை தூய்மை நாளில் கடற்கரையில் 1 டன் கழிவுகள் அகற்றப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் “உலக கடற்கரை தூய்மை நாள் ” செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல்படையினர் கடந்த 30 ஆண்டுகளாக கடற்கரையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வருடமும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கடலோர காவல்படை பிரிவு டி.ஐ.ஜி. அரவிந்த் சர்மா தலைமையில் 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொண்ட குழு புதிய துறைமுக பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார் 67 பைகளில் 1 டன் அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடி கடற்கரை தூய்மையாக காட்சியளிக்கிறது.