Categories
பல்சுவை

வருகிறது சீசன் விற்பனை….. ” அமேசான் , பிளிப்கார்ட்”…. உற்சாகம்…!!

பண்டிகை சீசனில் செல்போன் மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க இணையதள வழி நின்று வணிக நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக சந்தைப்படுத்தலின் வணிகமும் மாற்றம் கண்டு இணையதளம் வாயிலாக பெரும் பொருட்கள் விற்கப்படுகின்றன. பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்த முறையில் மின் சாதனங்கள் தொடங்கி மளிகைபொருட்கள் வரைக்கும் அனைத்தையும் விற்பனை செய்கின்றன. சீசனுக்கு ஏற்ப பொருட்களை சந்தைப்படுத்தும் முறையையும் இந்நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

Image result for அமேசான் , பிளிப்கார்ட்''..

இந்த வகையில் நவராத்திரி , தீபாவளி , கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து வரும் பண்டிகை காலத்தில் செல்போன்கள் , மின்சாதனங்கள் , அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட விற்பனையை அதிகரிக்க முனைப்பு காட்டி வருகின்றன.இதற்காக இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அமேசான் , பிளிப்கார்ட்  ஆகிய நிறுவனங்கள் செய்திருக்கும் ஆர்டர்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பண்டிகை காலங்களில் பொருட்களுக்கு வழங்கப்படும் மிகுதியான தள்ளுபடி காரணமாக வழக்கமான விற்பனையை விட 40% அதிகமாக இருக்கும் என  அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |