அனைவருக்கும் கடனில் சலுகை வழங்குவது முடியாது என இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது
கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் முடங்கிப் போய் உள்ளது. ஆனால் இதைக் கருத்தில் வைத்து அனைவருக்கும் கடன் சலுகைகள் வழங்க முடியாது என செபி (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ரியல் எஸ்டேட் சங்கத்தினரின் மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரிய செபி “இந்த வழக்கு வேறுவிதமானது இது அவரவர் சங்கத்தினர் முடிவெடுத்து தீர்வு காண வேண்டியது” என அதன் தரப்பு வாதத்தை முன் வைத்தது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு பொருந்துமா? ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதற்கு தகுதி தகுதியானவையா? என்பது குறித்தும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்ப அதற்கு செபி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.