இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவரும் நடிகை சாய்ஷாவும் காப்பான், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட காதலால் இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திரையுலகில் க்யூட் கப்பிலாக இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவரான ஆர்யாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில், “என் ஜானிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். நான் எப்பொழுதும் உன்னை நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.