Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராங்கி’ படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு…!!!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடித்து வரும் ‘ராங்கி’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது.

96 மற்றும் பேட்ட படங்களைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் கர்ஜனை மற்றும் ராங்கி படங்கள் தயாராகி வருகிறது.இதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் A.R. முருகதாஸ் கதையில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய M. சரவணன் இயக்கதில் ராங்கி திரைப்படம் உருவாகியுள்ளது.அதிரடிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

Image result for raangi movie look poster

இப்படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய நிலையில் தற்போது அதன் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது.இதைனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் கோபமான முகத்துடன் கையில் துப்பாக்கியுடனும் கூடிய நடிகை த்ரிஷா புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Categories

Tech |