Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் மிக அரிதான திட்டம்!”.. அதிக பயன் பெறும் இந்தியர்கள் உற்சாகம்..!!

அமெரிக்க நாட்டில் நிரந்தரமான குடியுரிமை இல்லாமல் பணிபுரியும் பிற நாட்டு மக்களுக்காக எச்-1 பி விசா அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா வழங்கும் இந்த விசாவை உலகில் உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கும் இந்திய மக்களும், சீன மக்களும் பெறுகிறார்கள். இதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் நபர்களிடம் இந்த விசாவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வருடந்தோறும் 85 ஆயிரம் H-1B  விசா அளிக்கப்படுகிறது.

ஆனால் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2.25 லட்சம் நபர்கள். இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விசா அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான குலுக்கல், இந்த வருட தொடக்கத்தில் நடந்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்கா, மிகவும் அரிதாக எச்-1பி விசா விண்ணப்பித்தவர்களுக்கென்று இரண்டாவது தடவையாக குலுக்கல் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில், அமெரிக்க குடியுரிமை, குடிவரவு சேவைகள் முகைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடந்த ‘எச்-1 பி’ விசாவிற்கு கணினி முறையில் நடந்த குலுக்கல், நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட ‘எச்-1 பி’ விசாக்களுக்கான  எண்ணிக்கையை நிறைவு செய்யவில்லை என்று முடிவெடுத்த பின்பு இரண்டாம் குலுக்கலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த இரண்டாம் முறை குலுக்கலில், மேலும் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.‌ இதில் அதிகமானோர், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.‌

Categories

Tech |