Categories
உலக செய்திகள்

என் திருமணம் அர்த்தமற்றதாகி விட்டது…. உண்மையை உடைத்த பிரதமரின் முன்னாள் மனைவி….!!

இங்கிலாந்து பிரதமரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை அவருடைய 2 ஆவது மனைவி கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் என்பவருக்கும், Allegra Mostyn Owen என்பவருக்கும் கடந்த 1987 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இவர்கள் 1993 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், போரிஸ் ஜான்சன் மரினா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு தம்பதியர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன்பின் தற்போது பிரித்தானிய பிரதமர் அவருடைய காதலியான கேரி சைமண்ட்ஸ் என்பவரை வெஸ்ட்மின்ஸ்டரிலிருக்கும் கதீட்ரலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் இந்தத் திருமணம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போரிஸ் ஜான்சனிடமிருந்து விவாகரத்துப் பெற்ற 2 ஆவது மனைவியான மரினா கடந்த 2019ஆம் ஆண்டு கர்ப்பவாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மரினா பெண்களை கர்ப்பவாய் புற்றுநோய்க்கான பரிசோதனையை செய்யுமாறு வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் தன்னுடைய திருமண வாழ்க்கைக்காக போடப்பட்ட திட்டம் மிகவும் மோசமாகி விட்டது என்றும், நானும் என்னுடைய குழந்தைகளும் மோசமான விஷயங்களை பார்க்க நேர்ந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் என்னுடைய திருமண வாழ்க்கை சத்தியமற்று போய்விட்டது என்றுள்ளார்.

Categories

Tech |