Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் அதிபருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!”….. வெளியான தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் அதிபரான ஆரிஃப் ஆல்விக்கு இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தற்போது கொரோனா தொற்றின் 5-ஆம் அலை பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. 5 நாட்களாக தொண்டை வலியும், 2 நாட்களாக காய்ச்சலும் இருந்தது.  எனினும், வேறு அறிகுறிகள் எனக்கு ஏற்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |