ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் கைகளில் நவீன ஆயுதங்களை கண்டவர்கள் கேட்கும் முதல் கேள்வி, இதற்கு இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது? என்பதே. தலிபான்களின் முக்கிய வருமானமே போதைப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தான். அபின் சாகுபடி, அதிலிருந்து மார்பின், ஹெராயின் போன்ற காஸ்ட்லி போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் தங்கள் வருமானத்தில் 60 சதவீதத்தை இவர்கள் ஈட்டுகின்றனர்.
உலகில் போதைப் பொருள் உற்பத்தி மையம் தற்போது ஆப்கானிஸ்தான் தான். ஆப்கானிஸ்தானிலிருந்து நடக்கும் சட்டவிரோத போதை வணிகத்தின் மதித்து 49 ஆயிரம் கோடி என்கிறது ஐநா. போதை செடிகள் சாகுபடி பாசன வசதி செய்வது முதல், அதன் உற்பத்தி, விநியோகம், அவற்றுக்கு வரி இடுதல் உட்பட அனைத்து வணிகமே தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில் போதை செடி பயிரிடுவதற்கு தலிபான்கள் தடை விதித்து இருந்தனர். ஆனால் தற்போது நடப்பது என்னவோ வேறு.