Categories
உலக செய்திகள்

“ஈரான் பிரதமர் வீட்டில் ரகசிய தாக்குதல்!”.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பிரதமர்..அமெரிக்கா கடும் கண்டனம்..!!

அமெரிக்க அரசு, ஈரான் பிரதமர் மீது ரகசியத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு கடுமையாக எச்சரித்திருக்கிறது.

தற்போது ஈரானின் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் முஸ்தபா அல் கமிதி, உள்துறை தலைவராக இருந்த சமயத்தில், அமெரிக்க நாட்டுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று ஈரான் பிரதமர் வீட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ட்ரோன்களில் வைத்து ரகசியமாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இத்தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 7 பேருக்கும், பிரதமருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளரான நெட் பிரைஸ் கூறுகையில், ஈராக்கின் பிரதமர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை கடுமையாக எதிர்க்கிறோம்.

ஈரான் நாட்டின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் பொறுப்பேற்றிருக்கும், அந்நாட்டின் பாதுகாப்பு படைகளோடு நாங்கள் தொடர்பில் இருந்துகொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |