Categories
தேசிய செய்திகள்

ரகசிய திருமணங்கள் செல்லாது என அறிவிக்க முடிவு… மாநகராட்சி முடிவு..!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ரகசியமாக நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சில மாநகராட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநிலமும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் திருமணங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரகசியமாக நடக்கும் திருமணங்கள் செல்லாது என அறிவிக்க மத்திய பிரதேசத்திலுள்ள மாநகராட்சிகள் முடிவு செய்துள்ளன. மேலும் ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் விதிகளை மீறி திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |