தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கிலும் நடிகர் தனுஷ் அறிமுகமாக இருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கேப்டன் மில்லர் என்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் பிரிந்தது அனைவருக்குமே தெரிந்தது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் சென்னையில் உள்ள ஒரு 5 ஸ்டார் நட்சத்திர விடுதிக்கு அடிக்கடி சென்று வருகிறார் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நட்சத்திர விடுதியில் நடிகர் தனுஷ் யாரையோ அடிக்கடி சந்திக்கிறாராம். நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவைதான் மறைமுகமாக சந்திக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், யாரை சந்திக்கிறார் என்ற உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. அதாவது நடிகர் சிம்பு வைத்தான் அடிக்கடி தனுஷ் சந்திக்கிறாராம்.
ஏனெனில் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் தற்போது அவருடைய ஆசை நடக்காது என்பது தெரிந்து விட்டது. இதனால்தான் ப. பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நடிகர் தனுஷ் நடிகர் சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளாராம். மேலும் நடிகர் சிம்புவை வைத்து படத்தை இயக்குவதற்கு தனுஷ் முடிவு செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.