பிரிட்டனில் அரசர் சார்லஸ் எப்போதும் தன் கையில் வைத்திருக்கும் ஒரு பெட்டிக்கான ரகசியத்தை அரச குடும்பத்தின் ஒரு ஊழியர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரிட்டன் நாட்டின் மன்னராக பதவியேற்றிருக்கும் சார்லஸ் தன் வாழ்க்கை முறையை சரியாக கடைபிடித்து வாழ்கிறார். எனவே, தான் செய்யும் சில விஷயங்களை அவர் மாற்றாமல் இருக்கிறார். நாட்டில் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து, மன்னராக பதவியேற்ற சார்லஸ், தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு பெட்டியை வைத்திருக்கிறார்.
அது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அரண்மனையினுடைய முன்னாள் சமையல்காரராக இருந்த கிரஹாம் நியூபோல்டு இது பற்றி தெரிவித்ததாவது, மன்னர் வைத்திருக்கும் பெட்டியில் அவர் காலை சாப்பிடக்கூடிய சிற்றுண்டி இருக்கும். அதாவது அவர் வீட்டில் செய்யப்பட்ட பிரட், பழ வகைகள், சாறுகள், ஆறு விதமான தேன், உலர் பழங்கள் போன்றவற்றை வழக்கமாக அந்த பெட்டியில் வைத்து எடுத்து செல்வார் என்று கூறியிருக்கிறார்.
எனவே, மன்னரான பின்பும் தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் எந்த சமயத்திலும் சிற்றுண்டி சாப்பிடும் நேரம் தவறி விடக்கூடாது என்பதற்காக கையில் வைத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தினசரி காலையில் தான் பல் துலக்குவதற்கு, ஒரு இன்ச் பற்பசையை வைத்திருக்க தனியாக ஒரு பணியாளரை நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.