Categories
உலக செய்திகள்

நின்றுகொண்டிருந்த வேனில் ரகசிய அறை… சோதனை செய்த காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!


காவல்துறையினர் நின்றுகொண்டிருந்த வேனில் ரகசிய அரை இருந்ததை சோதனை செய்ததில் போதைப்பொருளை கண்டறிந்தனர்.

பிரித்தானியாவில் உள்ள டொனக்கஸ்டர் என்ற பெட்ரோல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த வேனில் ரகசிய அறை இருப்பதை கண்டறிந்தனர். அதற்குள் இருந்த 45 பாக்கெட்களில் பிரபல ஆடம்பர பொருட்கள் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பாக்கெட்களை பிடித்து பார்த்தபோது அதற்குள் கொக்கைன் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதன் மதிப்பு 5.7 மில்லியன் பவுண்ட்கள். வேனை ஓட்டி வந்த ஓட்டுநரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் நீதிமன்றத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வெளியாகிய வீடியோவில் வானில் உள்ள ரகசிய அறையிலிருந்து போலீசார் போதைப்பொருளை கைப்பற்றியதை பார்க்கலாம்.

Categories

Tech |