மாவு கடையில் வைத்து சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலமேடு பகுதியில் இட்லி மற்றும் தோசை மாவு அரைத்து விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு தினமும் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாவு கடையை ரகசியமாக கண்காணித்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள மாவு கடையில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்துள்ளனர்.
இதனைப்பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த செல்வகுமார், சரவணன், ஆவரங்காடு பிரபு, தில்லைநகர் மணி, பெரியசாமி,யுவராஜ் என தெரியவந்துள்ளது. மேலும் காவல் துறையினர் அவர்களை கைது செய்து சூதாடுவதற்கு பயன்படுத்திய 24,000 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாவு கடையில் அனுமதியின்று வைத்திருந்த 1 1/2 டன் ரேஷன் அரிசியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.