Categories
பல்சுவை

பாதுகாப்பான தீபாவளிக்கு…… “SDR முறை” சுருதிகாசன் விளக்கம்….!!

கடந்த 2015 ஆம் ஆண்டு தீயணைப்பு துறையின் சார்பாக நடிகை சுருதிஹாசன் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில்,

ஒவ்வொரு வருடமும் நாம் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. புது புது துணிகள், விதவிதமான பலகாரம், புது படம் ரிலீஸ், damaal-dumeel பட்டாசுகள், வண்ண நிறங்கள் கொண்ட வானவேடிக்கை, குடும்பத்துடன் அந்த நாளை கழிப்பது என்பதே ஒரு தனி கொண்டாட்டம். அந்த கொண்டாட்டம் சந்தோஷத்தில் முடிந்தால் மிகவும் சந்தோஷம். உங்களுக்கு ஒன்று தெரியுமா ஒவ்வொரு வருடம் தீபாவளி அன்று கவனக்குறைவாக செயல்பட்டு வெடி விபத்தினால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் சிலர் உயிர் பலியும் ஆகின்றனர்.

Image result for suruthihasan safe diwali

ஆகையால் பாதுகாப்பான தீபாவளியே மகிழ்ச்சியான தீபாவளி. பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான துணிகளை அணிந்து கொள்ள வேண்டும். பட்டுப்பாவாடை, சேலை, துப்பட்டா போன்றவற்றை அணிந்து இருக்கக்கூடாது. புஷ்வானம் தரையில் வைத்துக் கொளுத்தினால் பாதுகாப்பானது. அதை கையில் எடுத்து கொள்ளுத்தக்கூடாது. பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்த வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக்கூடாது.

Image result for suruthihasan safe diwali

திறந்தவெளியில் பட்டாசு வெடிப்பது நமக்கும் நமது சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பானது. கண்டிப்பாக பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது பக்கத்தில் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து கொள்வது  மிகவும் அவசியம். தீக்காயம் பட்டால் உடனடியாக கோல்டு வாட்டர் அல்லது கீழே படுத்து உருள வேண்டும். Emergency நேரத்தில் SDR(Stop,Drop,Roll) முறையை ஃபாலோ பண்ண வேண்டும். நமக்கு எப்பொழுதும் சேவை பண்ண காத்திருக்கும் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு உதவிக்கு 101 or 102 என்ற எண்ணிற்கு டயல் செய்யவும்.

Categories

Tech |