Categories
உலக செய்திகள்

நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு… ரஷ்யாவின் கடும் போக்கான நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜோபைடன்…!

ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதிக்கு உணர்த்த ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை நோர்வேக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆர்லேண்ட் விமான தளத்திற்கு போர் விமானங்களும், 200 அமெரிக்க ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்க்டிக் வட்டம் மற்றும் ரஷ்யாவின் வட மேற்கு கடற்கரையின் சர்வதேச வான் வெளியில் இந்த நடவடிக்கை மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவுக்கு ரஷ்யாவின் கடும்போக்கான நடவடிக்கைகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிரம்ப் அரசு போன்று ரஷ்யாவுடன் இணக்கமாக பைடன் அரசு இருக்காது என்று கூறப்படுகிறது.

Categories

Tech |