தனியார் நிறுவன காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ரங்கநாதன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தர்மபுரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரங்கநாதன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.