தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடலூரில் பேசிய வினோஜ் பி.செல்வம், இன்று தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். அதைவிட பார்த்தீங்கன்னா கரூர் மாவட்ட அரசியலின் தலையெழுத்தை மாற்ற போகும் நாள். ஏன்னு கேட்டோம் என்றால் ? சில மாதங்களுக்கு முன்பாக மத்திய மாநில அரசினுடைய காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிச்சு, மக்களுடைய உழைப்பை திருடி தின்னு, லஞ்சப் பணம் பெற்று குடும்ப அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர். இந்த கடலூர் மாவட்டத்தினுடைய ஒரு அமைச்சர்.
நமது மாநில தலைவர் படிச்சு பட்டம் பெற்று, ஐபிஎஸ் ஆகி கர்நாடகாவில் சேவை செய்து, என் சேவை தமிழக மக்களுக்கு தேவை என்ற நோக்கத்தோடு, நரேந்திர மோடி அவர்களின் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டுக்கு அரசியல் செய்ய, மேன்மையான அரசை கொடுக்க, நல்வழியில் தமிழ்நாட்டை நடத்த, அவர் படித்த படிப்பை விட்டு, செய்யும் தொழிலை விட்டுவிட்டு, சுத்தமான அரசியல் தமிழகத்துக்கு தருவதற்காக தமிழகம் வந்த திரு அண்ணாமலை அவர்களை,
உங்க மாவட்டத்தை சேர்ந்த…. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சவால் விட்டிருந்தார். தைரியம் இருந்தால் அண்ணாமலை அவர்கள் கடலூர் மாவட்டத்திற்கு வரட்டும் என்று… நிச்சயமாக இதை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் லைவ்ல பார்த்துகிட்டு இருப்பார்.
ஓபன் சவால், இங்கு கூடி இருக்கக்கூடிய கூட்டம். பறைசாற்றக்கூடிய கூட்டம். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் கடலூரில் பிஜேபி வரும். அண்ணாமலை அவர்களும் வந்து விட்டார். கடலூருக்குள் பிஜேபியும் நுழைந்து விட்டது என்பதை நிரூபிக்க போகும் கூட்டம் என தெரிவித்தார்.