டெல்லியில் தனது பேஸ்புக் காதலனை பார்க்க சென்ற காதலியை அந்த இளைஞன் 25 பேருடன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலத்தில் 21 வயதான ஒரு பெண் வீட்டு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தனது வேலையை முடித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பேஸ்புக்கில் ஒரு இளைஞனுடன் பழகி வந்துள்ளார். அந்த இளைஞனுக்கு வயது 25. சில நாட்களில் அந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து அந்த இளைஞன் தனது பெற்றோரை பார்ப்பதற்காக ஒரு ஹோட்டலுக்கு வரும்படி கூறியுள்ளார்.
இதை நம்பி அந்த பெண்ணும் ஹோட்டலுக்கு சென்றபோது அந்த இளைஞன் ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல், தனது நண்பர்கள் 20 பேரையும் வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்வதை பார்த்து ரசித்துள்ளான். பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். அங்கிருந்து தப்பிய அந்த பெண் காவல் நிலையத்தில் அந்த இளைஞன் மீதும், அவர்கள் நண்பர்கள் மீதும் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த கூட்டத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.