தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை, ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வகையில் கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்ட பொறுத்த வரைக்கும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும், எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது.
அதற்கு முந்தைய ஆண்டுகளில் நமது மாநிலம் சந்திச்ச மந்த நிலையை நாம மாத்தி காட்டினோம். மக்கள் வாழ்வு மீண்டும் வளம்பெற துவங்கிச்சு. இப்போ 2023 ஆம் ஆண்டுல உங்க ஒவ்வொருத்தருடைய சமூக – பொருளாதார – வளர்ச்சியும் இன்னும் அதிகரிக்கிற ஆண்டா அமைய நானும், நமது அரசும் தொடர்ந்து பாடுபடும். உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்க்கிறதுதான் எனக்கு முக்கியம். அதுக்காக தான் நான் முதலமைச்சர் பதவியை ஒரு பெரும் பொறுப்பா பார்த்து பணியாற்றி வருகின்றேன்.
கடந்த ஓராண்டு காலத்தில் நமது அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான மகத்தான சாதனைகளை செஞ்சிருக்கு. அதையெல்லாம் நாம் பட்டியல் போட்டு சொல்லணும்னு அவசியம் இல்ல. அதனால பயன்பெறக்கூடிய உங்களுக்கு அது நல்லா தெரியும். ஆட்சி பொறுப்புக்கு வந்த அன்னைக்கே நான் சொன்னேன், எனக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல, வாக்களிக்க தவறியவர்களும் பாராட்டும் முதலமைச்சராக நான் செயல்படுவேன் என சொன்னேன். அப்படித்தான் செயல்பட்டு வந்தேன். அரசு விழாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் எல்லா இடங்களிலும், மக்களாகிய உங்கள் அன்பை நான் உணர்கிறேன்.
அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்!
புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக!
இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!#HappyNewYear2023 pic.twitter.com/MkhXnMUEqm
— M.K.Stalin (@mkstalin) December 31, 2022