Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை கண்டு…. மத்திய அரசு அஞ்சுகிறதா…? – ராகுல் கேள்வி…!!

விவசாயிகளை கண்டு மத்திய அரசு அச்சப்படுகின்றதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வேளாண் சட்டங்கள் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு குரல் எழுந்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை ஏன்? விவசாயிகளை கண்டு மத்திய அச்சப்படுகின்றதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |