ஏப்ரல் 5ம் தேதி பிரதமர் மோடி கூறியதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் ஒளியேற்ற கூறும் பிரதமர் தயவு செய்து பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Dear @narendramodi,
We will listen to you and light diyas on April 5. But, in return, please listen to us and to the wise counsel of epidemiologists and economists.— P. Chidambaram (@PChidambaram_IN) April 3, 2020
மேலும் ஒவ்வொரு உழைக்கும் ஆணும், பெண்ணும், வணிக நபர் முதல் தினசரி கூலி சம்பாதிப்பவர் வரை, பொருளாதார சரிவைக் கைதுசெய்து பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும், இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும்.
வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். செல்போன் டார்ச் மூலம் கொரோனோவுக்கு எதிராக வெளிச்சத்தை காட்டுங்கள். கொரோனா எனும் இருட்டை வெளிச்சத்தால் அகற்றுவோம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.