நடிகர் சூர்யாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பிரபலங்கள் உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சூர்யா இவர்கள் அனைவருக்கும் ஒருபடி மேலாகச் சென்று, தனி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கைகளில் அவர் கேட்டிருந்த ஒவ்வொரு கேள்வியும் அத்தனை சரியானதாக இருந்தது. கல்விக்கு ஆதரவாக சூர்யா வெளியிட்ட அறிக்கை மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதன்படி,
நடிகர் சூர்யா திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகன் தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார். நீட்தேர்வு எனும் சமூக அநீதிக்கு எதிராக பொறுப்புணர்வோடும், கண்ணியத்தோடும் அறச்சீற்றம் செய்த அன்புத் தம்பி சூர்யா அவர்களது கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன் கூறியுள்ளார்.