தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது குறித்து பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,மக்களுக்கு ஒரு சிந்தனை வேண்டும். இவ்வளவு பணம் இவர்களிடம் எப்படி வந்தது என்று என்றைக்கு சிந்திக்கிறார்களோ அன்றைக்கு தூய அரசியலுக்கான தொடக்கம் வந்துவிடும்.
அது இல்லாதபோது நாம் போராடிக் கொண்டு இருக்க வேண்டியது தான். அவர்கள் ஒரு வேலையும் செய்யாமல்…. சும்மா உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு… கணக்கெடுத்து பணம் கொடுத்து விடுவர்கள். அப்படி என்றால் இது எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது.
பணம் கொடுத்து மதிப்புமிக்க உரிமையை விற்கின்ற ஏழ்மை வறுமை நிலையில் தான் இத்தனை ஆண்டுகளாக என் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிகிறது இது அசிங்கம், தப்பு என்று தெரிகிறது. ஆனாலும் மீறி நாலாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் கொடுக்கும்பொழுது வேறு வழி இல்லை, வறுமைக்கு மதிப்புமிக்க உரிமையை விற்கிறார்கள்.
அதை தெரிந்து தான் விற்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு 10,000, 6000 என்றால் 10 வாக்கு இருக்கின்ற வீட்டில் எவ்வளவு பணம் வருகிறது என்று பாருங்கள். தினக்கூலிக்கு இது பெரிய பணம். அதனால் இதை சரி செய்ய வேண்டும். அதற்கு கடுமையான சட்ட வரைவு கொண்டு வரவேண்டும் என சீமான் தெரிவித்தார்.