Categories
அரசியல் மாநில செய்திகள்

இது கேவலமா இருக்கு… மக்களுக்கு சிந்தனை வரணும்…. வேதனையில் புலம்பிய சீமான்…!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இது குறித்து பேசிய சீமான், இன்றைக்கு ஊழல், லஞ்சம் என்று பேசுபவர்கள்…. அதனை ஒழிக்க போகின்றோம் என சொல்கிறவர்கள்…. உழலுக்கான முதல் விதையே ஓட்டுக்கு காசு கொடுப்பது தான்.

ஓட்டுக்கு காசு கொடுக்கிறதிலும், வாங்குவதிலும் தான் பிறக்கிறது ஊழல். ஓட்டுக்கு காசு கொடுப்பதை முதலில் ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது. இந்த கடமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இங்கு மாற்றம் என்பது மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. அதிக பணம் கொடுத்தவன் வென்றான்.

மக்களுக்கு ஒரு சிந்தனை வேண்டும். இவ்வளவு பணம் இவர்களிடம் எப்படி வந்தது என்று என்றைக்கு சிந்திக்கிறார்களோ, அன்றைக்கு தூய அரசியலுக்கான தொடக்கம் வந்துவிடும். இது கேவலமாக இருக்கிறது என சீமான் பேசினார்.

Categories

Tech |