Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சீமான் நுழைய தடை …. நெல்லை போலீஸ் அதிரடி ..!!

நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய சீமானுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர் .

சில நாட்களாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு சுற்றுச்சூழல் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும், இடதுசாரி இயக்கங்களும் அணுக்கழிவு  மையம் அமைப்பதை தடுக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அழிவு மையமானது கூடங்குளத்தை சுற்றியுள்ள உள்ள கிராம பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ள நிலையில்,நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று அணுக்கழிவு மைய தீட்டத்திற்கு எதிராக  நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Image result for seeman

ஆனால் நடைபெற இருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தர இருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவினுள்  நுழையவே அனுமதி கிடையாது என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Categories

Tech |