திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு முதல்வர் ஸ்டாலினிடம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை மற்றும் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு துறை போன்றவைகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு விழாவில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சீமான் இதில் வியப்பேதும் இல்லை. சொல்லப்போனால் உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் உதயநிதி துணை முதல்வராக கூட மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.