Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கப்படுகிறது “சீமான் கடும் குற்றசாட்டு !!…

நாம் தமிழர் கட்சி மத்திய மாநில அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார் இது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது .

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  

மயிலாடுதுறை மக்களவைதேர்தல் தொகுதியில்  நாம் தமிழர் கட்சி சார்பில்போட்டியிடும் வேட்பாளர் சுபா‌ஷினி அவர்களை ஆதரித்து நேற்றையதினம்  தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் நாம்தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார் அவர்  பேசியதாவது ,

மக்களின் அடிப்படை தேவைகளான கல்வியையும்  மருத்துவத்தையும் தனியாருக்கு இந்த அரசு தாரை வார்த்து கொடுத்துவிட்டது. இன்றைய தினத்தில் திமுக கட்சியானது கச்சத்தீவை மீட்போம் மீத்தேன் திட்டத்தை ஒழிப்போம் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் போன்ற கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக வைத்துள்ளது அவர்கள் வைத்துள்ள இந்த தேர்தல் அறிக்கைகள் எல்லாம் அவர்களது காலத்தில் அவர்களால் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் அனுமதித்த அவர்களே தற்போது தடை செய்வது போல் நாடகம் ஆடுவது அநாகரிகம் இதனை மக்கள் உணர வேண்டும் என்று பேசினார்

மேலும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சி எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை சொல்லக்கூடிய அளவில் ஒன்றுமே செய்ததில்லை கடந்த 5 ஆண்டுகளில் செய்யாத திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளில் செய்துவிடப் போகிறார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று அவர் பேசினார்

மேலும் நாம் தமிழர் கட்சியை பழிவாங்கும் விதமாக தங்களது கட்சி சின்னத்தை வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகவும் மங்கலாக பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார் மேலும் மக்களிடம் பிரசாரங்களில் ஈடுபடும் பொழுது கரும்பு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக வாக்கியத்தில் எந்தச் சின்ன மங்கலாக இருக்கிறதோ அந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று வருத்தத்துடன் அவர் தெரிவித்தார்

Categories

Tech |