பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் சீமான் பரபரப்பாக பேசியுள்ளார்.
திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார் அவர் பேசியதாவது, தற்போது நடைபெற்று முடிந்தது தேர்தல் மட்டும்தான், நாம் தமிழர் கட்சிக்கான தேடுதல் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறியுள்ளார் .
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் வெறும் தேர்தளுக்கானவர்கள் அல்ல தேர்தலில் தோற்றாலும் ,வென்றாலும் மக்களுடன் களத்தில் நிற்கக் கூடியவர்கள். ஆகையால் தேர்தலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும்,அதை தவிர அதிக பணிகள் நமக்கு உள்ளது என்றும், அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது அதிலும் நாம் தமிழர் கட்சி அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி போட்டியிடும், அதிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.