Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மக்களுக்கு பிரச்சனையே இவங்கதான்…. 100 நாளில் என்ன பண்ணிடுவாங்க…. சீமானின் அதிரடி பேச்சு….!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 13ஆவது சட்டத் தொகுதிகளில் போட்டியிட இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றுள்ளார். இதில் அவர் பேசியபோது “சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையையாக உள்ளனர். இந்த விடுதலையை உறுதியளிக்கும் வகையில் தற்போது ஆளுநர் கையெழுத்திட உள்ளார்.

இந்த முறை வெற்றி அறிவிப்பாக இல்லாமல் ஆக்கபூர்வமாக செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். இட ஒதுக்கீடு கொள்கையில் நான் துணை நிற்பேன். மக்களுக்கு பிரச்சனையே அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டும்தான். இத்தனை ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாதவர்கள் வெறும் நூறு நாட்களில் தீர்க்க போகிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பாஜக ஆட்சி பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் கொடுந்திட்டங்கள். வட இந்தியாவில் ராமர் கோவில், கேரளாவில் ஐயப்பன் கோவில், தமிழகத்தில் முருகன், பாஜகவும் ஸ்டாலினும் வேல் எடுத்தது தேர்தலுக்காக மக்களை இழுக்கத்தான்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |