Categories
அரசியல் மாநில செய்திகள்

Seeman, Thirumavalavanனை கைது செய்யவேண்டும்..NTK, VCK வை தடை செய்ய வேண்டும்..Arjun Sampath ஆக்ரோஷம் ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட, இந்திய அரசாங்கத்தால் தேச விரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட  PFI ஐ ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து இவர்கள் பேசி வருகிறார்கள்.

எனவே இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். PFIக்கு ஆதரவாக பேசுகின்ற எந்த இயக்கமாக இருந்தாலும், தலைவர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும். இந்த PFI தடை செய்திருக்கிறார்கள் என்றால்,  PFI-ம் ஆர்எஸ்எஸ்-ம் ஒன்றில்லை. PFI வந்து தடை செய்ய வேண்டும் என்கின்ற முயற்சியை கேரள மாநில அரசாங்கம் கம்யூனிஸ்ட் அரசாங்கம் எடுத்தது.

தெலுங்கானா அரசாங்கம் எடுத்தது. ஆர்எஸ்எஸ் அப்படி இல்லை.  ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட இயக்கமல்ல. ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு நடத்துவது என்பது தமிழகத்தில் அது மத நல்லிணக்கத்திற்கு தான் வழிவகுக்கும். விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் வேண்டுமென்று உள்நோக்கத்தோடு நாங்களும் போட்டி பேரணி நடத்துவோம் என்று அறிவித்து,  ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க அவர்தான் முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |