Categories
மாநில செய்திகள்

”மோசமான பின் விளைவுகள் ஏற்படும்” சீமான் எச்சரிக்கை …!!

திருவள்ளுவர்  சிலையை அவமதிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சீமான் கூறுகையில் , திருவள்ளுவருக்கு காவி அடித்து , தன் வயப்படுத்த பார்க்கிறார்கள். இது வழக்கமாக அவர்கள் செய்கின்ற ஒன்றுதான். முகத்தில் கருப்பு துணியை கட்டி , சிலையை சேதப்படுத்துவது ,  அவரை இழிவுபடுத்துவது , சாணி கரைத்து முகத்தில் கரியை பூசுவது தேவையற்ற மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதில் கவனமாக இருக்கனும் , ஆட்சியாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சீமான் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |