ராஜிவ் காந்தி படுகொலையில்எங்களுக்கும் தொடர்பு இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.சீமானின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில் ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சீமானின் கருத்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை என்றும் , தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படும் இந்த அபாண்ட பழி துடைத்தெறிய வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி தொடர்ந்து அரசியல் செய்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.