வேலூர் தொகுதியில் எங்கள் வேட்பாளர் செலவிட்ட தொகையினை தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுக்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினர்
வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதையடுத்து இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் சாலிகிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டுள்ளது.அத்தொகுதியில் முறைகேடு செய்த வேட்பாளரை தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். முறைகேடு செய்த கட்சியர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வேலூர் தொகுதியில் எங்களுடைய வேட்பாளர் தேர்தல் ஆணையம் வரவழைத்த தொகையை விட குறைவாக தான் செலவு செய்துள்ளனர். மீண்டும் அந்த தொகையை திருப்பித் தருவார்களா? எங்கள் வேட்பாளர் செலவிட்ட தொகையினை தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுக்கொள்ளுமா? என்றும் கேள்வி எழுப்பினர்.