சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
புவின் மாநிலத்தில் உள்ள உஹான் உள்ளிட்ட 31 நகரங்களில் நேற்று மட்டும் 100 பேர் உயிரிழந்ததாக சீன சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இதுவரை 1011 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அரசு கொரோனா உயிரிழப்பு குறித்து உண்மை தகவல்களை மறைப்பதாக அமெரிக்க வாழ் சீன தொழிலதிபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தினமும் 1200 உடல்கள் ரகசியமாக எரிக்கப்படுவதாக தொழிலதிபர் குவாவெங்குய் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உஹான் நகரில் வசித்து வந்த சுமார் 50 லட்சம் பேர் மாயமாகி இருப்பதாக சமீபத்தில் சீன அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் குவாவெங்குய் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.