Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஐஸ் திருவிழா” களைகட்டிய சீனா…. குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்…!!!

சீனாவில் ஐஸ் திருவிழா களைகட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் வருவாய் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இரவை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள்  குளிர்  நிறம்பிய பனிப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள். வானில் இருந்து பூமியில் நடக்கும்  ஐஸ் திருவிழாவை படம்பிடிக்கும்  ரோன்கள், என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

இந்த  ஐஸ் திருவிழாவில்  பொம்மைகள் போன்று உடை அணிந்து, ஐஸ் கட்டிகள்  மீது,  வரிசையாக வந்து பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடியது, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. வானில் இருந்து வந்த ரோன்  கேமெராக்கள்  எடுத்த காட்சிகள் தத்ரூபமாக திரையில் காண்பிக்கப்பட்டது.

பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட கலைஞர்கள் குழு நிகழ்த்திய ஸ்கேட்டிங் நிகழ்ச்சி  பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது . சீனாவில் ஆண்டுதோறும் ஐஸ் திருவிழா கலை கட்டும், என்றாலும் கடந்தை ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 30 சதவீதம் அளவிற்கு கூடுதல் சிறப்பை ஏற்படுத்தியாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில்  இது போன்ற ஐஸ் திருவிழாக்கள் சீனாவின் வடமாகாணங்களில்  பெரும்பாலானவை பெரும்  வருமானத்தை ஈட்டுவது என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்னிக்கை  மேலும் அதிகரிக்க சீன  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

Categories

Tech |