பூமியை கண்காணிப்பதற்காக செயற்கைக்கோள் ஓன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது
பூமியில் நடப்பவற்றை கண்காணிப்பதற்காக புதிய செயற்கைக் கோள் ஒன்றை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது. அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என அந்நாடு அறிவித்துள்ளது. மேலும் விண்ணில் செலுத்தப்பட்ட அந்த செயற்கைக் கோளின் பெயர் ‘காபென்5-02′ ஆகும்.
இதனையடுத்து அந்த செயற்கைக்கோள் பூமியின் உருண்டையான வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் கண்காணிபுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.