கொரோனா தடுப்பு ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் கொவிஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே சீரம் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றியது.
அந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீ பிடித்ததால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக இதுபற்றி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறி அவ்விடமானது புகையால் சூழ்ந்து காணப்படுகிறது.