Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி அருகே திடுக்கிட வைத்த கோவில் திருட்டு பின்னணி…!!

சீர்காழி அருகே கஞ்சாவுக்கு அடிமையான சிறுவர்கள் இருவர்  கோவில் உண்டியல்களில் கைவரிசை காட்டிய நிகழ்வு பதற வைக்கிறது.

சீர்காழி அருகே கோவில் திருட்டு போவதாக தொடர்ந்த சந்தேகத்தின் பேரில் தெட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை போலீசார் விசாரித்துள்ளனர். கிடுக்குப்பிடி கேள்விகளால் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் போலீசாரை பதற வைத்திருக்கிறது. கோவில் உண்டியல்களில் திருடி அந்த பணத்தை வைத்து கஞ்சா வாங்கி வந்துள்ளனர் சிறுவர்கள்.

கஞ்சா வாங்குவதற்காக, புத்தகம் படிக்கும் வயதில் கத்தியை பிடித்து திருடர்களாக மாறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணையில் மயிலாடுதுறை அருகே மாபடுகையில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பது தெரியவந்திருக்கிறது. சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கும் கஞ்சா கும்பலை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Categories

Tech |