நடிகை ஆலியா பட்டின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இது அல்லுரி சீதாராம ராஜு , கொமரம் பீம் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாகும். இந்தப்படத்தில் நடிகர் ராம்சரன் சீதாராமாவாகவும் ,ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட் ,ராகுல் ராமகிருஷ்ணா ,சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
Strong-willed and resolvent SITA's wait for Ramaraju will be legendary!
Presenting @aliaa08 as #Sita to you all 🙂@tarak9999 @AlwaysRamCharan #RRR #RRRMovie pic.twitter.com/NFe4WwjS6u
— rajamouli ss (@ssrajamouli) March 15, 2021
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா பட்டின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.