சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது காவல்துறையினர் வருவதாக நினைத்து ஓடும்போது ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்மலை பகுதியில் கட்டிட மேஸ்திரியான சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இதனை அடுத்து சிவக்குமார் தனது நண்பர்களுடன் கன்னிதோப்புக்கு பின்புறம் இருக்கும் ஒரு தோப்பில் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது காவல்துறையினர் வருவதாக நினைத்து விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் பதறியடித்து வீடுகளுக்கு ஓடி சென்றனர். அப்போது துரதிஷ்டவசமாக சிவகுமார் ஓடும்போது கிணற்றில் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்த சிவகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.