Categories
தேசிய செய்திகள்

சேகர் ரெட்டியின் மாப்பிள்ளையாக வர இருப்பவருக்கு திடீரென மாரடைப்பு…. தற்போதைய நிலை என்ன?…. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை….!!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (26) ரெட்டிக்கு நேற்று டிச..18-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சந்திரமௌலி ரெட்டி முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கேத்லாப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் கவலைக் கிடமாக இருக்கிறார். ஆகவே மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவால் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆந்திராவில் வசித்து வரும் சேகர் ரெட்டியின் மகள் மற்றும் சந்திரமௌலிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |