சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் சச்சின் அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன் எடுத்து ஆடி வருகின்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் உலக தொடர் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றனர். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா முதலிய நாட்டின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் பொறுப்பேற்று நடத்தும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி மோதியது.
முதலில் பேட் லாரா தலைமையிலான செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அந்த அணியின் சந்திரபால் 61 ரென்னும் , கங்கா 32ரன்னும் எடுத்தனர். கேப்டன் லாரா 17 ரன் அடித்தார். இந்திய அணி சார்பில் கோணி , படேல் , ஓஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 151 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சச்சின் தலைமையிலான இந்திய அணி அடிவருகின்றது. தொடக்க வீரராக களமிறங்கிய சேவாக் , சச்சின் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியினரின் பந்து வீச்சை விளாசி வருகின்றது. ஆட்டத்தின் முதல் இரண்டு பந்தை பவுண்டரிக்கு விளாசி சேவாக் அசத்தினார்.
தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் , சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன் பார்ட்னர் ஷிப் அமைத்தது. தொடர்ந்து பொறுமையுடன் ஆடியதால் இந்திய அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி விக்கெட்டுக்கு 75 ரன் எடுத்துள்ளது. சேவாக் 31 பந்துகளில் 33 ரன்னும் , சச்சின் 23 பந்துகளில் 30 ரன்னும் எடுத்துள்ளனர்.