சேவாக்கின் மனைவி தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி 4.5 கோடி கடன் வாங்கியதாக தொழில் கூட்டாளி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீ ரேந்தர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி. இவர் தொழில் கூட்டாளி ஒருவர் தனது கையெழுத்தை தவறுதலாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் 4.5 கோடி கடன் வாங்கியுள்ளார் என்றும், அந்த பணத்தை அந்நிறுவனத்திடம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி, தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது இந்த புகாரில், “தனது கணவர் வீரேந்தர் சேவாக்கின் பெயரை தவறாக பயன்படுத்தியும், தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியும் கடன் வாங்கியுள்ளார். இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அந்த கடனுக்காக முன் தேதியிட்டு வழங்கப்பட்டுள்ள காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி சென்றுள்ளன. இதனால் தன்னை சிக்க வைத்துள்ள தொழில் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.