Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுங்க… நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்… அதிகாரிகள் சமரசம்..!!

மயிலாடுதுறையில் கழிவுநீர் தெருவில் விடப்படுவதை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரட்டை காளியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவானது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்கு கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி கழிப்பிட கட்டிட கழிவுநீர் மற்றும் வணிக நிறுவனங்கள் கழிவு நீர் ஆகியவை வந்து சேர்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் சீர்காழி நகராட்சியில் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இரட்டை காளியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் வடிகால் விடுவதற்கு நகராட்சி ஆணையரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் கழிவுநீர் விடாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |