திருப்பத்தூரில் சித்த மருத்துவ மையத்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சித்த மருத்துவ மருந்துகளை பெற்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய்த் தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள், உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை சித்தமருத்துவ ஊழியர்கள் மூலமாக பரிசோதனை செய்துகொள்ளலாம். இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள வைரஸ் தொற்றை விரட்ட மூலிகை தூப புகை போடப்பட்டு நோயாளிகளை சுவாசிக்க வைக்கின்றனர்.
இதனால் நோயாளிகளுக்கு வாசனையற்ற நிலையைப் போக்குவதற்கு ஓமப்பொட்டணம் எனும் சித்த மருந்து வழங்கப்படுகின்றது. இதுகுறித்து சித்த மருத்துவர் உமேரா கூறுகையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலோசனைகள், சித்த மருந்துகள், மூலிகை குடிநீர், கபசுரக் குடிநீர், கைகழுவ மூலிகை கிருமி நாசினி, தூப புகை, இஞ்சிச் சாறு தேன் கலந்த கலவை மற்றும் மூலிகை முக கவசம் போன்றவை இலவசமாக வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சித்த மருத்துவ மையத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் சித்த மருந்துகளை பெற்று சென்றுள்ளனர்.